DAILY TAMIL MOTIVATIONAL QUOTES

தடதடன்னு ஓடிக்கிட்டிருக்கு இந்த வாழ்க்கைப் பயணம். இதுல மேடு பள்ளங்கள் மாதிரி, குண்டு குழிகள் மாதிரி, எத்தனையோ அவமானங்கள், காயங்கள், வருத்தங்கள், ஈகோக்கள், புடலங்காய்கள்...
நின்னு பாத்து, திரும்பிப் பாத்து, திரும்ப நடக்கறதுக்குள்ளே போதும்போதும்னு சொல்ற அளவுக்கு மனசை அறுக்கற சம்பவங்கள், தொடர்ந்துகிட்டே இருக்கு... நம்மளை விட வேகமா!
எல்லாத்துக்கும் வலி நிவாரணி இருக்கு. வலியைத் தாங்கினாத்தான் வாழ்க்கைல ஜெயிக்க முடியும். வாழ்க்கையையே ஜெயிக்க முடியும். அந்த வலிநிவாரணிங்கறது... நேர்மை. உண்மை. முக்கியமா அன்பு.

2.
பயணத்தின் போது, பாக்கறவங்ககிட்ட, பேசுறவங்ககிட்ட, பழகறவங்ககிட்ட, நம்ம கூடவே டிராவல் பண்றவங்ககிட்ட அன்பாவும் உண்மையாவும் நேர்மையாவும் நடந்துக்கிட்டாலே, வலி வர்ற வாய்ப்பே இல்லை. இந்த டிராவலிங்ல, நம்ம மனைவி குழந்தைகள்லேருந்து அக்கம்பக்கத்துக்காரங்க உட்பட எல்லாருமே உண்டு!
எல்லார்கிட்டயும் உண்மையா இருப்போம். பாசாங்கு இல்லாமப் பழகுவோம்.

3.

கோபமோ அழுகையோ 
சந்தோஷமோ வருத்தமோ
பாராட்டோ சுள்ளுன்னு விமர்சனமோ...
மனசுல ஒளிச்சு வைச்சுக்கறது ஆரோக்கியமானது அல்ல! வெளிப்படையா இருக்கறதுதான் நல்லது. 
அப்படி இல்லாது போனா, மனசு பாரமாகி, அழுத்தி, இம்சை செஞ்சு, அதகளம் பண்ணிரும்!

4.
நன்றியை உடனே சொல்றதே இல்லை. உதவியை சட்டுனு செய்றதே இல்லை. ஆனா, கோபத்தையும் வன்மத்தையும் மட்டும் தடக்குதடக்குனு காட்டிடுறோம். குறிப்பா, இதுலதான் நிதானத்தைக் கையாளணும். ரீ ஆக்ட் பண்றதை ஒத்திப்போடணும். 

5.
நாம செய்ற புண்ணியம், நம்ம புள்ளைங்க தலைல வந்து குவியும். அதேபோல செய்ற பழிபாவம் பசங்க தலைல விழும். இதை மனசுல வைச்சிகிட்டு, இன்றைய வாழ்க்கைய நடத்தினா, நாமளும் நல்லாருப்போம். நம்ம சந்ததியும் நல்லாருக்கும். வாழ்க வளர்க.
6.
சாலையில் விழுந்துவிட்டால்...
யாரும் பார்க்கும் முன்பே எழுந்திரு.
வாழ்க்கையில்
விழுந்துவிட்டால்...
எல்லோரும் பார்க்கும்படி
எழுந்திரு!
- லாரியின் பின்னே எழுதியிருந்த வாசகம் 
7.
முயற்சி திருவினையாக்கும். முயற்சியே
அப்படீன்னா விடாமுயற்சி
8.
ஜெயிக்கற வரைக்கும் மதிப்பு எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்த்தாலும் கிடைக்காது. ஜெயிச்சிட்டோம்னா, லைன் கட்டிக்கிட்டு வந்து நிக்கும். அப்ப, தொடர்ந்து ஜெயிக்கணும்னு ஓடறதுக்கே நேரம் சரியா இருக்கும்.
9.
எதையும் தள்ளிப் போடவேணாம். வேணும்னா, துக்கப்படுறதையும் கோபப்படுறதையும் தள்ளிப் போடுவோம்.நல்லது. சந்தோஷத்தை தள்ளிப் போடவே வேணாம்.
போனா கிடைக்காது.


No comments:

Post a Comment